/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'குழந்தைகளை கோவில்களுக்கு அழைத்துச் செல்வது அவசியம்'
/
'குழந்தைகளை கோவில்களுக்கு அழைத்துச் செல்வது அவசியம்'
'குழந்தைகளை கோவில்களுக்கு அழைத்துச் செல்வது அவசியம்'
'குழந்தைகளை கோவில்களுக்கு அழைத்துச் செல்வது அவசியம்'
ADDED : ஆக 31, 2025 12:46 AM

தொண்டாமுத்துார் : ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விசர்ஜன பொதுக்கூட்டம், பூலுவபட்டியில் நடந்தது. மூத்த வக்கீல் ரங்கராஜ் தலைமை வகித்தார்.
ஹிந்து முன்னணி திருப்பூர் மாவட்ட தலைவர் அண்ணாதுரை பேசுகையில், ''குழந்தைகள் மொபைல்போன் இல்லாமல் இருப்பதில்லை. தேவையற்றதை பார்ப்பதால் கலாசாரம் சீரழிந்து வருகிறது.
அவர்களின் நடவடிக்கைகளை பெற்றோர் கண்காணிப்பதில்லை. பெற்றோரின் பாதுகாப்பின்மை காரணமாகவே, குழந்தைகள் போதை கலாசாரத்தில் சிக்கித்தவிக்கின்றனர்.
நம் கலாசாரத்தை அழிக்க, பல வகையிலும் நடவடிக் கைகள் மேற்கொள் கின்றனர். கலாசாரம், தேசத்தை காக்க, குழந்தைகளுக்கு வழிபாட்டு முறைகளையும், சித்தர் நமக்கு காட்டிய வாழ்வியல் முறைகளையும், உணவு முறைகளையும் கற்பிக்க வேண்டும். ஆன்மிக நிகழ்ச்சிகள் மற்றும் கோவிலுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும்,'' என்றார்.
மாவட்ட செயலாளர்கள் ரமேஷ்குமார், செல்வகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.