தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நல்லதா ‘நாலு’ விஷயம்! பிரித்து தந்தால் சேர்த்து விடுவார்கள்

நல்லதா ‘நாலு’ விஷயம்! பிரித்து தந்தால் சேர்த்து விடுவார்கள்

நல்லதா ‘நாலு’ விஷயம்! பிரித்து தந்தால் சேர்த்து விடுவார்கள்


ADDED : ஆக 20, 2026 01:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 01:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார்: ‘குப்பையை, நான்கு வகையாக பிரித்து தர வேண்டும்’ என, கிராம ஊராட்சிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி துவங்கியுள்ளது.

அன்னுார் ஒன்றியத்தில், 22 ஊராட்சிகள் உள்ளன; 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். சிறிய ஊராட்சிகளில், தினமும் இரண்டு டன்னும், பெரிய ஊராட்சிகளில் நான்கு டன் வரையும் குப்பை சேகரிக்கப்படுகிறது. குப்பை சேகரிக்க போதிய பேட்டரி வாகனங்கள் இல்லாதது, மிகக் குறைவான துாய்மை பணியாளர்கள், குப்பையை தரம் பிரிக்க கருவிகள் மற்றும் கொட்டகை என போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், பெரும்பாலான ஊராட்சிகளில் முழுமையாக குப்பை தரம் பிரிக்கப்படுவதில்லை.

சில ஊராட்சிகளில், சாலையோரத்தில் குப்பையை கொட்டி தீ வைக்கின்றனர். சிலர், குளம், குட்டை, பள்ளங்களில் கொட்டி விட்டு செல்கின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண, ஊரக வளர்ச்சி துறை புதிய நடவடிக்கையை துவக்கி உள்ளது. இதன்படி, ஊராட்சிகளில் கண்டிப்பாக குப்பைகளை நான்கு வகையாக பிரித்து தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முத்துராஜ் கூறுகையில், ‘‘பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு என, நான்கு வகையான குப்பை சேகரிக்கும் கலன்கள் அனைத்து ஊராட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து வீடுகளுக்கும் சென்று குப்பையை நான்கு விதமாக பிரித்து தர வேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்த, ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,’’ என்றார். வடக்கலுார் ஊராட்சியில் பொதுமக்களிடம் நடந்த பிரசாரத்தில், எந்தெந்த பொருட்களை, எந்தெந்த கலன்களில் சேகரிக்க, பிரித்து தர வேண்டும் என, ஊராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பச்சை: காய்ந்த இலைகள், காய்கறி கழிவுகள், தேங்காய் மூடி, காபி துாள், உணவு, பூக்கழிவு, முட்டை ஓடு, மாமிச கழிவு.

நீலம்: அட்டைப்பெட்டிகள், பால் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பாலிதீன் கவர்கள், தெர்மோகோல் மற்றும் உலோகப் பொருட்கள்.

சிவப்பு: சானிடரி நாப்கின், குழந்தைகளின் டயபர், பட்ஸ்.

கருப்பு: பேட்டரிகள், மின்கழிவுகள், காலாவதியான மருந்துகள், தெர்மாமீட்டர்கள், வேதிக் குடுவைகள், உடைந்த கண்ணாடிகள்.

எனவே, பொதுமக்கள் குப்பையை தரம் பிரித்து தர வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us