தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மின்தடை புகார்களை தீர்க்க புதிய திட்டம்! முதல்வர் உத்தரவால் துவக்கம்

மின்தடை புகார்களை தீர்க்க புதிய திட்டம்! முதல்வர் உத்தரவால் துவக்கம்

மின்தடை புகார்களை தீர்க்க புதிய திட்டம்! முதல்வர் உத்தரவால் துவக்கம்

2


UPDATED : செப் 28, 2026 10:05 PM

ADDED : செப் 28, 2026 10:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2026 10:05 PM ADDED : செப் 28, 2026 10:03 PM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: மின்வாரிய தலைமை அலுவலகத்தில், முதல்வர் விஜய் ஆய்வு செய்த பின், ஆரோக்கியமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. அதில் முக்கியமானது மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் திட்டம்.

மின்வெட்டு, டிரான்ஸ்பார்மர் பழுது, மின்கம்பி துண்டாவது, லோடு சிக்கல், புதைவட கேபிள் பழுதாவது உள்ளிட்டவற்றால், அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுகிறது. எதிர்க்கட்சியினர் இது குறித்து அரசை விமர்சித்து வருகின்றனர்.

மின்வாரியத்தில் என்னதான் நடக்கிறது, பார்ப்போமே என்ற முடிவுடன் கடந்த வாரம் முதல்வர் விஜய், சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்துக்கு திடீர் விசிட் அடித்தார். மின் தேவை, விநியோகம், எதனால் பற்றாக்குறை ஏற்படுகிறது என்பது குறித்தெல்லாம் அதிகாரிகளிடம் உட்கார்ந்து விலாவாரியாக விசாரித்தார்.

அதன் அடிப்படையில் உள்கட்டமைப்பு மேம்பாடு, டிரான்ஸ்பார்மர்களை மாற்றுவது உள்ளிட்ட தேவைகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற உத்தரவிட்டார்.

பழுதுகளை உடனடியாக சரிசெய்ய தேவையான களப்பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக அதிகாரிகள் சொன்னார்கள். தற்காலிகமாக 18,000 ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க உடனடியாக உத்தரவிட்ட முதல்வர், பொதுமக்களின் புகார்களை உடனடியாக தீர்த்து வைக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதன் எதிரொலியாக, மின்துறை சார்ந்த புகார்களை அந்தந்த மின்வாரிய பிரிவு அலுவலராக உள்ள உதவிபொறியாளரின் மொபைல் போன் எண்ணில் தெரிவிக்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

பகுதிவாரியாக மின்வாரிய பிரிவு அலுவலர் போன் எண், ஒவ்வொரு மின்நுகர்வோருக்கும் மெசேஜ் ஆக அனுப்பப்படுகிறது.

கோவை (மெட்ரோ) மாநகரில் 6.5 லட்சம் மின் இணைப்புகளும், வடக்கில் 5.5 லட்சம், தெற்கில் 6.5.லட்சம் மின் இணைப்புகளும் உள்ளன. அத்தனை இணைப்புகளுக்கும் இந்த மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மெட்ரோ மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சாந்தநாயகியிடம் நமது நிருபர் கேட்டார்.

அதற்கு அவர், ''மின்வினியோகத்தில் ஏற்படும் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. மெட்ரோவில், 53 பிரிவு அலுவலகங்கள் உள்ளன. அதிலுள்ள உதவி பொறியாளரின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் புகார்களை, அவர் களப்பணியாளர்களுக்கு தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார். இதற்காக களப்பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம்.

சிக்கலுக்கு தீர்வு கண்ட பிறகு அது குறித்தும் பதிவு செய்யப்படுகிறது. தீர்க்க முடியாத பெரிய பிரச்னைகள் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்படும். தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்து அவற்றையும் தீர்த்து வைப்பார்கள்,'' என்றார்.

இதற்கு முன் மின் புகார்களை கூற பொதுமக்கள் போன் செய்தால், 'நீங்கள் வரிசையில் உள்ளீர்கள்; காத்திருக்கவும்' என்று பதிவு செய்யப்பட்ட தகவல் வரும். காத்திருந்தால் சிறிது நேரத்தில் இணைப்பு துண்டிக்கப்பட்டு விடும்.

திராவிட ஆட்சிகளில் பின்பற்றப்பட்ட இந்த நடைமுறையால் வெறுத்துப்போயுள்ள மின்நுகர்வோருக்கு, இந்த புதிய திட்டம் ஆறுதல் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை, உடனுக்குடன் புகார்களுக்கு தீர்வு காணும் வரை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us