ADDED : பிப் 12, 2026 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: 'வரும் 15ம் தேதி வரை கோவை மாவட்டத்தில் வறண்ட வானிலையே நிலவும். வானம் தெளிவாக காணப்படும். வெப்பநிலை சற்று அதிகமாக இருக்கும். அதிகபட்சம் 34 டிகிரி செல்சியஸ் வரை செல்லும்.
வறண்ட வானிலை காரணமாக பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தக்காளியில் வெள்ளை தாக்குதலுக்கு வாய்ப்புள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கவும்.
முன்பருவ கரும்பு சாகுபடி செய்யலாம். கொடி வகை காய்கறிகளில், பெண் பூக்களை அதிகரிக்க, உரிய மருந்து தெளிக்கவும்# என, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

