/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிதி ஒதுக்கி ஆறு மாசம் ஆச்சு; இதுவரை பணி துவங்கல
/
நிதி ஒதுக்கி ஆறு மாசம் ஆச்சு; இதுவரை பணி துவங்கல
ADDED : டிச 18, 2024 08:41 PM

அன்னுார்; நிதி ஒதுக்கி, பணி உத்தரவு வழங்கி, ஆறு மாதங்கள் ஆகியும் பணி துவங்காததால் மக்கள் தவிக்கின்றனர்.
காட்டம்பட்டி ஊராட்சி, கணேசபுரம், ராஜேஸ்வரி நகரில், அன்னுார் கூட்டுறவு பண்டக சாலையில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடைக்கு செல்லும் வழி மண் பாதையாக உள்ளது.
மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், மக்கள் ரேஷன் கடைக்கு செல்ல சிரமம் ஏற்படுகிறது. அதிக அளவில் மண் உள்ளதால் இருசக்கர வாகனங்கள் சறுக்கி விபத்து ஏற்படுகின்றன.
இதையடுத்து ஒன்றிய கவுன்சிலர் வித்யா, பேவர் பிளாக் பாதை அமைக்க மூன்று லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினார். ஒப்பந்ததாரருக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டு, ஆறு மாதங்களுக்கு மேலாகி விட்டது. பூமி பூஜையும் நடத்தப்பட்டது. ஆனாலும் இதுவரை பணி துவங்கவில்லை.
இதே போல் கணேசபுரம் , அந்தோணியார் நகரில், இரண்டாவது வீதியில், மண் பாதையில் கான்கிரீட் சாலை அமைக்க, ஒன்றிய பொது நிதியில் ஏழு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இதற்கும் பணி உத்தரவு வழங்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும் இதுவரை பணி துவங்கவில்லை. இதனால் இந்த நிதி மீண்டும் அரசுக்கே செல்லும் அபாயம் உள்ளது. 'நிதி ஒதுக்கப்பட்ட இப்பணிகளை விரைவில் துவக்க வேண்டும்,' என கணேசபுரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

