‘எதிர்பாராமல் விழுங்கி சிக்கிய பொருளை எடுப்பது எளிது’
‘எதிர்பாராமல் விழுங்கி சிக்கிய பொருளை எடுப்பது எளிது’
ADDED : செப் 12, 2026 02:04 PM
கோவை: எதிர்பாராமல் விழுங்கி, சிக்கி விடும் பொருட்கள், நவீன சிகிச்சை முறைகள் மூலம் பாதுகாப்பாக பி.எஸ்.ஜி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அகற்றப்படுகின்றன.
பி.எஸ்.ஜி. சிறப்பு மருத்துவமனை இயக்குனர் டாக்டர் புவனேஸ்வரன் கூறுகையில்,‘‘ பொருள் சிக்கியுள்ள இடம், அதன் தன்மைக்கேற்ப விரைந்து பரிசோதித்து, நவீன எண்டோஸ்கோபிக் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படுகிறது,’’ என்றார்.
இன்டர்வென்ஷனல் பல்மனாலஜிஸ்ட் டாக்டர் வருண் கூறுகையில், ‘‘வெளி பொருட்கள் மற்றும் சிந்தடிக் பொருட்கள் குழந்தைகளின் காது, மூக்கு மற்றும் தொண்டையில் சிக்கும் போது, பெற்றோர் அகற்ற முயற்சி செய்ய கூடாது,’’ என்றார்.
குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாவை அருணாச்சலம், ‘‘குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் அல்லது உணவுப் பொருட்களை விழுங்கி சிக்கிக்கொண்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்,’’ என அறிவுறுத்தினார்.
