/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர்மோர் பந்தல் துவங்கிய ஜெகன்னாத் நிறுவனம்
/
நீர்மோர் பந்தல் துவங்கிய ஜெகன்னாத் நிறுவனம்
ADDED : மார் 20, 2025 05:47 AM

கோவை : கடுமையான வெயிலில் மக்களுக்கு ஆசுவாசம் அளிக்கும் விதமாக, ஜெகன்னாத் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஜெகன்னாத் பிராப்பர்ட்டீஸ் சார்பில், கோவையில் நீர், மோர் பந்தல்கள் திறக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையில், அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் , இப்பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேற்கு டி.வி.சாமி ரோடு, அன்னபூரணி கோவில் அருகில், ஆர்.எஸ்.புரம் குமாரசாமி ஏரிக்கு அருகிலுள்ள நீர் மோர் பந்தல்களை, கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் துவக்கி வைத்தார்.
ஜெகன்னாத் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரமேஷ் குமார் திபர்வால் கூறுகையில், '' கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படும் மக்களுக்காக, 90 நாட்களுக்கு இந்த நீர், மோர் பந்தல்கள் செயல்படும். தேவையின் அடிப்படையில், நகரின் பிற பகுதிகளில் கூடுதலாக பந்தல்கள் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்,'' என்றார்.