/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூலுார், அன்னுார் தாலுகாவில் 20ம் தேதி ஜமாபந்தி துவக்கம்
/
சூலுார், அன்னுார் தாலுகாவில் 20ம் தேதி ஜமாபந்தி துவக்கம்
சூலுார், அன்னுார் தாலுகாவில் 20ம் தேதி ஜமாபந்தி துவக்கம்
சூலுார், அன்னுார் தாலுகாவில் 20ம் தேதி ஜமாபந்தி துவக்கம்
ADDED : மே 12, 2025 11:23 PM
சூலுார்; சூலுார் தாலுகாவில், ஜமாபந்தி எனும் வருவாய் தீர்வாயம் வரும், 20ம் தேதி துவங்கி, 23ம் தேதி வரை நடக்கிறது.
வருவாய்த் துறையில் வருவாய் கிராம வாரியாக வரவு - செலவு கணக்குகளை சரிபார்த்து, தணிக்கை செய்யும் வகையில், ஆண்டுதோறும், ஜமாபந்தி எனும் வருவாய் தீர்வாயம், தாலுகா அலுவலகங்களில் நடக்கும். சூலுார் தாலுகாவில், வரும், 20ம் தேதி துவங்கி, 23ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக, தணிக்கை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சூலுார் தாலுகாவில் உள்ள நான்கு உள் வட்ட வருவாய் கிராமங்களுக்கு நான்கு நாட்கள் ஜமா பந்தி நடக்கிறது. அதன்படி, 20ம் தேதி கருமத்தம்பட்டி உள்வட்டத்துக்கு உட்பட்ட கணியூர், பதுவம்பள்ளி, காடுவெட்டிபாளையம், கிட்டாம் பாளையம், கருமத்தம்பட்டி, செம்மாண்டாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு நடக்கிறது. சூலுார் உள்வட்டத்துக்கு உட்பட்ட இருகூர், சூலுார், காங்கயம் பாளையம், காடாம்பாடி உள்ளிட்ட கிராமங்களுக்கு, 22ம் தேதி நடக்கிறது.
செலக்கரச்சல் உள்வட்டத்துக்கு உட்பட்ட செலக்கரச்சல், அப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு, 22ம் தேதி நடக்கிறது. வாரப்பட்டி உள் வட்ட கிராமங்களான, ஜே. கிருஷ்ணாபுரம், வதம்பச்சேரி உள்ளிட்ட கிரமங்களுக்கு, 23ம் தேதி ஜமாபந்தி நடக்கிறது.
மக்கள் தங்கள் குறைகளை மனுவாக ஜமாபந்தியில் அளித்து தீர்வு காண, வருவாய்த்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
அன்னுார் தாலுகா அலுவலகத்தில், வருகிற 20ம் தேதி துவங்குகிறது. கோவை வடக்கு ஆர்.டி.ஓ., கோவிந்தன் ஜமாபந்தி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் 20ம் தேதி, அன்னுார் தெற்கு உள் வட்டத்தைச் சேர்ந்த அன்னுார் பேரூராட்சி மற்றும் பச்சாபாளையம், நாரணாபுரம், மசக்கவுண்டன் செட்டிபாளையம், குன்னத்துார், பிள்ளையப்பன் பாளையம், கரியாம்பாளையம், காரேகவுண்டன் பாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், வடவள்ளி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கைகள் குறித்து மனு தரலாம்.
வரும் 21ம் தேதி, அன்னுார் வடக்கு உள் வட்டத்தைச் சேர்ந்த, ஆம்போதி, குப்பனுார், கனுவக்கரை, அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலுார், பசூர், அ. மேட்டுப்பாளையம், அல்ல பாளையம், கஞ்சப்பள்ளி, ஒட்டர் பாளையம், பொகலுார் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மனு தரலாம்.
வரும் 22ம் தேதி, எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி, இடிகரை பேரூராட்சி மற்றும் ஏழு ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மனு தரலாம்,' என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.