/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜன. 2ல் பி.எஸ்.ஜி. காதம்பரி இசை நிகழ்ச்சி
/
ஜன. 2ல் பி.எஸ்.ஜி. காதம்பரி இசை நிகழ்ச்சி
ADDED : டிச 29, 2025 05:49 AM

கோவை: பி.எஸ்.ஜி., அண்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பில், காதம்பரி இசை நிகழ்ச்சி வரும் ஜன.,2 முதல் 5ம் தேதி வரை நடக்கிறது.
பி.எஸ்.ஜி., சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் புவனேஸ்வரன் கூறியதாவது:
ஜன.2ம் தேதி பி.எஸ்.ஜி., கல்வி நிறுவன மாணவர்களின் 'தர்ம ஸ்வரங்கள்' லைட் மியூசிக் நிகழ்ச்சியுடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து, சிறந்த மாணவர் கலைஞர்களுக்கு, 'கலை சுடர் விருது' வழங்கப்படும். ஜன.3ம் தேதி, மாணவர்களின், 'தசாவதார தர்மம்' என்ற பாரம்பரிய நடன நிகழ்ச்சியும், 'யுவ கலாரத்னா' விருது வழங்கும் விழாவும் நடைபெறும். 'மதுர சங்கீதம்' கர்நாடக இசைக் கச்சேரி நடக்கிறது.
ஜன.4ம் தேதி மாணவர்களின் இசை நிகழ்ச்சியும் தொடர்ந்து, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் விருது பெற்ற சுதா ரகுநாதனின் சிறப்பு கர்நாடக இசைக் கச்சேரி நடைபெறும்.
ஜன.5ம் தேதி மாணவர்களின் 'உள்ளம் உருகுதையா' கர்நாடக இசை நிகழ்ச்சியும், பிரபல பாடகர் சத்ய பிரகாஷின் 'தர்மம் தலைக்காக்கும்' லைட் கிளாசிக்கல் இசை நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. அனைத்து நாட்களிலும் நிகழ்ச்சிகள் மாலை 5 முதல் 8.30 மணி வரை நடைபெறும். முன்பதிவு மூலம் இலவச அனுமதி வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு, 98947 59940, 98947 59934, 87540 22880 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

