/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மை பணியாளர்கள் 2 மாத போனஸ் கோரிக்கை
/
துாய்மை பணியாளர்கள் 2 மாத போனஸ் கோரிக்கை
ADDED : அக் 12, 2024 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்கத்தினர், மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'கோவை மாநகராட்சி தினக்கூலி பணியாளர்களான துாய்மை பணியாளர்கள், மலேரியா தடுப்பு பணியாளர்கள், குடிநீர் வினியோக பணியாளர்கள், ஓட்டுனர்கள், கிளீனர்கள் ஆகியோருக்கு இதுவரை சட்டப்படியான போனஸ் வழங்கவில்லை.
இனாமாக சொற்பத் தொகை வழங்கியது சட்டத்துக்கு புறம்பானது. இத்தொழிலாளர்கள், தீபாவளி போனசாக, இரண்டு மாத சம்பளம் வழங்க, மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்படி போனஸ் வழங்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளனர்.