UPDATED : ஜூன் 19, 2026 08:59 PM
ADDED : ஜூன் 19, 2026 05:01 PM
பிச்சனுாரில், ஸ்ரீ ஜெகன்நாத் கல்வி, சுகாதாரம் மற்றும் தொண்டு அறக்கட்டளையின் கீழ், ஜெ.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், பாலிடெக்னிக் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன.
பொறியியல் கல்லுாரி, 11 இளநிலை மற்றும் மூன்று முதுநிலை படிப்புகளுடன் செயல்படுகிறது. பாலிடெக்னிக் கல்லுாரியில், அக்ரிகல்ச்சர், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, பெட்ரோ கெமிக்கல் உட்பட துறைகளில் டிப்ளமோ படிப்புகள் நடத்தப்படுகின்றன. கலை, அறிவியல் கல்லுாரியில், பி.பி.ஏ., பி.எஸ்சி., கணினி அறிவியல், பி.எஸ்சி., செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் உட்பட நவீன பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன.
மாணவர்களுக்கு தனித்தனி விடுதிகள், சுகாதாரமான உணவு, கல்லுாரி பேருந்து உட்பட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நவீன நுாலகம், அதிநவீன ஆய்வகங்கள், எல்.சி.டி., வசதியுடன் கூடிய வகுப்பறைகள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் மாணவர்களின் கற்றலை மேம்படுத்துகின்றன. தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
ஆண்டுதோறும் 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், வளாக வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துவதால், மாணவர்கள் அதிகளவில் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். மற்றொரு சிறப்பம்சமாக 'சுரபி பண்ணை' விளங்குகிறது. உணவுத் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து செயல்படும் இப்பண்ணையில், மாணவர்களுக்கு செய்முறைப் பயிற்சி, சுயதொழில் மற்றும் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மாணவர் சேர்க்கை பற்றிய தகவல்களுக்கு 93614 88801.
