/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் நகை, பணம் கொள்ளை திருச்சி போலீசை பிடித்து விசாரணை
/
கோவையில் நகை, பணம் கொள்ளை திருச்சி போலீசை பிடித்து விசாரணை
கோவையில் நகை, பணம் கொள்ளை திருச்சி போலீசை பிடித்து விசாரணை
கோவையில் நகை, பணம் கொள்ளை திருச்சி போலீசை பிடித்து விசாரணை
ADDED : பிப் 02, 2024 01:02 AM
கோவை:கோவை ஆர்.எஸ்., புரம் மேற்கு ஆரோக்கிய சாமி வீதியை சேர்ந்தவர் கமலேஷ், 50, மொத்த பருத்தி வியாபாரம் செய்கிறார். இவர் கடந்த, 25ம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு மருத மலை கோவிலுக்கு சென்றார். வீட்டில் முதல் தளத்தில் அவரது மனைவி ரூபல், மகன் மிகர் மற்றும் வேலைக்கார பெண் இருந்தனர்.
அப்போது, மதியம் 1:00க்கு இரண்டு கார் மற்றும் பைக்கில், 10க்கும் மேற்பட்ட கும்பல் வந்தனர். அதில், 7 பேர் வீட்டிற்குள் நுழைந்து கமலேசின் மனைவி, மகன் மற்றும் வேலைக்கார பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி கட்டிப்போட்டனர்.
பின் தரை தள அலுவலகத்திற்குள் புகுந்து, அங்கிருந்த 9 லட்சம் ரூபாய், வீட்டில் இருந்த, பீரோவை திறந்து அதில் இருந்த, 37 சவரன் நகைகளை கொள்ளைஅடித்து தப்பினர். இதுகுறித்து ஆர்.எஸ்.,புரம் போலீசார் வழக்குப்பதிந்து, 5 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மேலும் போலீசாரின் விசாரணையில் கொள்ளையர்கள் ஐ.டி., அதிகாரிகள் போல நடித்து இருந்ததும், சரவணம்பட்டி வழியாக தப்பி சென்றதும் தெரிந்தது.
இந்நிலையில் திருச்சி போலீஸ்காரர் ஒருவர் இந்த கொள்ளை கும்பலுக்கு உதவியதாக இருந்தது தனிப்படை போலீசாரின் விசாரணையில் தெரிந்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

