/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கடையில் பணி; விண்ணப்பதாரர்கள் தவிப்பு
/
ரேஷன் கடையில் பணி; விண்ணப்பதாரர்கள் தவிப்பு
ADDED : மே 05, 2025 10:54 PM
அன்னுார்; நேர்காணல் முடிந்து ஐந்து மாதங்கள் ஆகியும் முடிவு வெளியாகாததால் விண்ணப்பதாரர்கள் தவிக்கின்றனர்.
கோவை மாவட்டத்தில், ரேஷன் கடைகளில், 129 விற்பனையாளர்கள் மற்றும் 70 எடையாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த அக்டோபரில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
நவம்பரில் நேர்முகத் தேர்வு நடந்தது. டிச. 25ம் தேதி தேர்வு பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் நேர்முகத் தேர்வு நடந்து ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரை தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகவில்லை. நியமன ஆணையும் வழங்கப்படவில்லை.
'அன்னுார் தாலுகாவில் பல இடங்களில் ரேஷன் கடைகளில் போதிய ஊழியர்கள் இல்லாமல் விற்பனையாளர்களே பொருட்களை எடை போட்டு வழங்க வேண்டி உள்ளது. அரசு விரைவில் தேர்வு பட்டியலை வெளியிட வேண்டும்,' என நேர்முக தேர்வில் பங்கேற்ற விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.