/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வேதியியல் படித்தால் வேலை வாய்ப்பு'
/
'வேதியியல் படித்தால் வேலை வாய்ப்பு'
ADDED : மார் 17, 2025 12:23 AM

மேட்டுப்பாளையம்; ''வேதியியல் துறையில் அதிக அளவில் வேலை வாய்ப்பு உள்ளது. எனவே வேதியியல் பாடத்தை வாழ்க்கை பாடமாகவும், புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கும் பாடமாகவும், படிக்க வேண்டும்,'' என, அரசு கல்லுாரி முதல்வர் ஸ்ரீகானப்பிரியா பேசினார்.
மேட்டுப்பாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் வேதியியல் துறை பேரவை துவக்க விழா மற்றும் அறிவியல் கண்காட்சி நடந்தது.
வேதியியல் துறை தலைவர் சாந்தி வரவேற்றார்.
கல்லுாரி முதல்வர் ஸ்ரீகானப்பிரியா தலைமை வகித்து பேசுகையில்,'' வேதியியல் துறையில் எப்போதும் வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. வேதியியல் தொழிற்சாலைகளில் உதவியாளராகவும், நிபுணர்களாகவும் வேலை கிடைக்கும். பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து, சாதனையை வெளிப்படுத்த இந்த வேதியியல் பாடம், நமக்கு வழிகாட்டியாக இருக்கும். எனவே இதை வாழ்க்கைக்கு உதவும் பாடமாகவும், பல்வேறு கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் பாடமாகவும் நீங்கள் படிக்க வேண்டும்,'' என்றார்.
வேதியியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி ஆனந்தி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
வேதியியல் துறை கவுரவ விரிவுரையாளர் ராஜேஸ்வரி நன்றி கூறினார். 'பசுமை வேதியியல்' அறிவியல் கண்காட்சியை கம்ப்யூட்டர் அறிவியல் துறை தலைவர் மாரிமுத்து, வணிகவியல் துறை தலைவர் சிவஞானசித்தி, ஆங்கிலத்துறை தலைவர் ஜெய்சங்கர் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர். கண்காட்சியில் மாணவர், மாணவியர் தங்கள் படைப்புகளை செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். இயற்பியல் துறை தலைவர் பாலன், கணிதத்துறை தலைவர் பபிதா ஆகியோர் நடுவர்களாக இருந்து, சிறந்த அறிவியல் கண்காட்சியை தேர்வு செய்து, பரிசுகளை வழங்கினர்.