தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 108 ஆம்புலன்ஸ் பணிக்கு வேலை வாய்ப்பு முகாம்

108 ஆம்புலன்ஸ் பணிக்கு வேலை வாய்ப்பு முகாம்

108 ஆம்புலன்ஸ் பணிக்கு வேலை வாய்ப்பு முகாம்


UPDATED : ஜூன் 17, 2026 09:06 PM

ADDED : ஜூன் 17, 2026 08:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2026 09:06 PM ADDED : ஜூன் 17, 2026 08:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கு, அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில், நாளை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

கோவை மாவட்டத்தில், '108' ஆம்புலன்ஸ் இயக்க, தலா 100 அவசர கால மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கு தகுதியானோர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான வேலைவாய்ப்பு முகாம், (ஜூன் 19ம் தேதி) காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை, அவிநாசி ரோட்டில் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.

இதில் மருத்துவ உதவியாளர் பணிக்கு பார்மஸி, டிப்ளமோ பொது நர்சிங், மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப படிப்பு, பி.எஸ்.சி., நர்சிங் முடித்தோர் விண்ணப்பிக்கலாம். டிரைவர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மோட்டார் வாகன லைசென்ஸ், பேட்ச் லைசென்ஸ் வைத்திருப்பது அவசியம்.

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில், தகுதியானோர் தேர்வு செய்யப்படுவதால், அனைத்து அசல் சான்றிதழ்களும் கொண்டு வருவது அவசியம் என, 108 ஆம்புலன்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us