UPDATED : அக் 14, 2026 03:56 PM
ADDED : அக் 14, 2026 03:54 PM
கோவை: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், அக்., 24ம் தேதி நடக்கிறது.
காளப்பட்டி ரோடு, நேரு நகரில் உள்ள சுகுணா கலையரங்க வளாகத்தில், காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை நடக்கும் முகாமில் 10, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லை.
50 முன்னணி தனியார் நிறுவனங்கள் ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. பணி நியமன ஆணை உடனே வழங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது.
பங்கேற்க விரும்புவோர் தங்களது சுயவிவர குறிப்பு மற்றும் கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன் நேரில் வர வேண்டும். அனுமதி இலவசம்.
தனியார் நிறுவனங்களும், வேலை தேடுவோரும் www.tnprivatejobs.tn.gov.in, www.ncs.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவு செய்யலாம். விவரங்களுக்கு 0422- 2642388.
