ADDED : செப் 05, 2026 04:10 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவை மாவட்ட தடகள சங்கம்(சி.டி.ஏ.ஏ.,) சார்பில் 65வது மாவட்ட ஜூனியர் தடகள போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்தது.
500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 20 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான 5000 மீ., ஓட்டத்தில் அனிதா, வினோதினி, வெண்ணிலா ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர்.
ஆண்களுக்கான(ஓபன்) 5000 மீ., ஓட்டத்தில் யோகேஸ்வர், பிரகதீஸ்வரன், கார்த்திக் ஆகியோரும், 5000 மீ., நடை போட்டியில் கதிர்வேல், ஓம் பிரகாஷ், சல்மான் ஆகியோரும், 16 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான உயரம் தாண்டுதலில் தக்ஷிதா, அதன்யா, மித்ரா ஆகியோரும் முதல் மூன்று இடங்களை தட்டி சென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
