/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டனை அழுத்தினா போதும்! பெண்கள் பாதுகாப்புக்கு மிஷின் ரெடி
/
பட்டனை அழுத்தினா போதும்! பெண்கள் பாதுகாப்புக்கு மிஷின் ரெடி
பட்டனை அழுத்தினா போதும்! பெண்கள் பாதுகாப்புக்கு மிஷின் ரெடி
பட்டனை அழுத்தினா போதும்! பெண்கள் பாதுகாப்புக்கு மிஷின் ரெடி
ADDED : பிப் 06, 2026 05:11 AM

உக்கடம்: மதியம் 12:30 மணி. டவுன்ஹால் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பெண்களிடம் பேச வந்தார், 'பிங்க் பேட்ரோல்'ல் ரோந்து வந்த உக்கடம் ஸ்டேஷன் சிறப்பு எஸ்.ஐ. கங்கா தேவி.
''எல்லோரும் கொஞ்சம் இங்க வாங்க... பஸ் வந்தா கிளம்பிடலாம். அதற்குள் உங்கள் பாதுகாப்புக்கு சில யோசனைகள்...” என்று மைக்கில் அழைத்தார். வந்தனர் பெண்கள்.
''இதோ பாருங்க ஒரு மிஷின். உங்க பாதுகாப்புக்கு தான் இது. யாராச்சும் சில்மிஷம் செஞ்சா, மிரட்டினா இதுல உள்ள பட்டனை அழுத்துங்க, போதும். உடனே போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு மெசேஜ் போய்விடும். கேமரா இருக்கு.
யாருக்கு பாதுகாப்பு தேவைன்னு அவங்க பாக்க முடியும். அடுத்த செகண்ட், எங்களுக்கு தகவல் வந்துரும். பிங்க் பேட்ரோல் பறந்து வந்து உங்களுக்கு பாதுகாப்பு தரும். இது தவிர காவலன் ஆப் இருக்கு. அதையும் டவுன்லோடு செஞ்சுக்கோங்க” என்று முடித்தார்.
''ரொம்ப நல்லதுங்க மேடம்'' என்றனர் பெண்கள்.
''வேலை முடிஞ்சு வீட்டுக்கு போகும் போது, கடைசி பஸ்சை தவற விட்டிருந்தாலும் எங்களை கூப்பிடுங்க. பக்கத்துல என்றால் நாங்களே வீட்டுக்கு கொண்டு வந்து விடுவோம். தூரம்னா வண்டி அமர்த்தி அனுப்புவோம்” என்றார்.
''அட, இது இன்னும் சூப்பரா இருக்கே..” என்றனர் பெண்கள். கங்காவுக்கும் உடனிருந்த காவலர்கள் காளீஸ்வரி, கவுசல்யாவுக்கும் அதை கேட்டு பெருமகிழ்ச்சி.
“தேர்தல் நெருங்கும்போது அரசாங்கத்துக்கு நம்ம மேல அக்கறையும் ஜாஸ்தி ஆகுது, இல்ல...?” என்ற கமென்ட் அவர்கள் காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை. என்றாலும், பல இடங்களில், இந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

