/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கி.கடவு ரயில்வே ஸ்டேஷன் கோடு; யு.டி.எஸ்., செயலியில் மாற்றணும்!
/
கி.கடவு ரயில்வே ஸ்டேஷன் கோடு; யு.டி.எஸ்., செயலியில் மாற்றணும்!
கி.கடவு ரயில்வே ஸ்டேஷன் கோடு; யு.டி.எஸ்., செயலியில் மாற்றணும்!
கி.கடவு ரயில்வே ஸ்டேஷன் கோடு; யு.டி.எஸ்., செயலியில் மாற்றணும்!
ADDED : நவ 21, 2024 09:25 PM
கிணத்துக்கடவு; யு.டி.எஸ்., செயலியில் கிணத்துக்கடவு ஸ்டேஷன் கோடு மாற்றம் செய்ய வேண்டும், என, ரயில் பயணியர் வலியுறுத்துகின்றனர்.
ரயில் பயணியர் சிரமத்தை போக்கவும், எளிமையாக டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கவும், ரயில்வே நிர்வாகம் யு.டி.எஸ்., செயலியை அறிமுகம் செய்தது. இதன் வாயிலாக பயணியர் டிக்கெட் முன்பதிவு செய்து பயன்பெறுகின்றனர்.
இதில், ஒவ்வொரு ஸ்டேஷன் நிறுத்தத்துக்கு ஒவ்வொரு கோடு, அந்தந்த ஊர் பெயரின் முதல் எழுத்தில் ஆரம்பமாகும் படி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கிணத்துக்கடவுக்கு வழங்கப்பட்டுள்ள கோடு 'CNV' என உள்ளது. இதனால், பயணியர் பலர் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, கிணத்துக்கடவுக்கு பதிலாக கோவைக்கு 'புக்' செய்து விடுகின்றனர்.
இதில், பயணியர் ரிசர்வேஷன் செய்யும் போது, ஸ்டேஷன் கோடு பிரச்னையால் சில நேரங்களில் பயணியர் இருக்கை பறிபோகும் வாய்ப்பு நேரிடுகிறது.
இதை சரி செய்யும் விதமாக, கிணத்துக்கடவு ரயில் பயணியர் சங்கம் சார்பில், ரயில்வே ஸ்டேஷன் வரும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, ரயில் பயணியர் சங்கத்தினர் கூறியதாவது:
ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் ஒரு கோடு உள்ளது. பொள்ளாச்சிக்கு 'POY', கோவைக்கு 'CBE' என ஊர் பெயர் ஆரம்ப எழுத்தில் கோடு இருக்கிறது. ஆனால், கிணத்துக்கடவுக்கு மட்டும் 'K' என ஆரம்பமாகாமல் 'CNV' என உள்ளது. இதனால், ரயில் பயணியருக்கு கோவைக்கும், கிணத்துக்கடவுக்கும் இருக்கும் கோடு வித்தியாசம் தெரியாமல் டிக்கெட்டை மாற்றி முன்பதிவு செய்கின்றனர்.
இதுகுறித்து, அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதனால், பாலக்காடு கோட்டத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க, கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் கோடை உடனடியாக மாற்றம் செய்ய, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.