/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலியல் தொல்லை அளித்த கபடி பயிற்சியாளருக்கு சிறை
/
பாலியல் தொல்லை அளித்த கபடி பயிற்சியாளருக்கு சிறை
ADDED : செப் 27, 2025 01:30 AM

சூலுார்: சூலுார் ரயில்வே பீடர் ரோட்டை சேர்ந்தவர் அருண்குமார், 38. கபடி மற்றும் சிலம்ப பயிற்சி அளிக்கும் அகாடமி நடத்துகிறார். அரசு பள்ளி மாணவியர் உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்றனர்.
சில தினங்களுக்கு முன், அரசு பள்ளி ஒன்றில், மாணவியர் இரு குழுவாக பிரிந்து தகராறில் ஈடுபட்டனர். அவர்களிடம் தலைமையாசிரியர் விசாரித்தபோது, சில மாணவியருக்கு அருண்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதுதொடர்பாக மாணவியருக்கு இடையே தகராறு நடந்ததும் தெரிந்தது. 'சைல்ட் லைன்' அமைப்புக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசாரும், 'சைல்ட் லைன்' அமைப்பினரும் நடத்திய விசாரணையில், மாணவியரின் புகார் உண்மை என தெரிந்தது. அருண்குமார் மீது சூலுார் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போக்சோ சட்டத்தில், வழக்குப்பதிவு செய்த போலீசார், அருண்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.