தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வாகனங்களை வழிமறித்த கபாலி யானையால் அச்சம்

வாகனங்களை வழிமறித்த கபாலி யானையால் அச்சம்

வாகனங்களை வழிமறித்த கபாலி யானையால் அச்சம்


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 07:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 07:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை: அதிரப்பள்ளி அருவிக்கு செல்லும் ரோட்டில், கபாலி யானை வாகனங்களை வழிமறிப்பதால் சுற்றுலாபயணியர் அச்சமடைந்துள்ளனர்.

தொடர்விடுமுறையின் காரணமாக, அதிரப்பள்ளி அருவியை காண அதிக அளவில் சுற்றுலா வாகனங்கள் சென்றன. நேற்று முன்தினம் மாலை அதிரப்பள்ளி ரோட்டில் சென்ற, அரசு பஸ் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்களை எதிரே வந்த கபாலி யானை விரட்டியது.

இதனால் வாகன ஒட்டுனர்கள் தங்களது வாகனங்களை பின் நோக்கி நகர்த்தினர். அதன் பின் சிறிது நேரம் வரிசையாக நின்ற வாகனங்களை நோட்டமிட்ட கபாலி, வனத்திற்குள் சென்றது. இதனால் சுற்றுலாபயணியர் நிம்மதியடைந்தனர்.

வனத்துறையினர் கூறுகையில், ‘அதிரப்பள்ளி ரோட்டில் நடமாடும் கபாலி யானை யாரையும் துன்புறுத்துவதில்லை. ஆனால் சுற்றுலாபயணியர் யாரேனும் அத்துமீறி அருகில் சென்றாலோ, செல்பி எடுத்தாலோ அவர்களை பயம் காட்டும் வகையில் விரட்டும். இருசக்கர வாகனங்களில் சுற்றுலாவரும் பயணியர் பகல் நேரத்தில் மிகவும் கவனமாக வந்து செல்ல வேண்டும். வால்பாறை அதிரப்பள்ளி ரோட்டில் மாலை நேர பயணத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us