/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'முதல்வர் கோப்பை' கூடைப்பந்து போட்டியில் காஞ்சிபுரம் அணி வீரர், வீராங்கனைகள் கலக்கல்
/
'முதல்வர் கோப்பை' கூடைப்பந்து போட்டியில் காஞ்சிபுரம் அணி வீரர், வீராங்கனைகள் கலக்கல்
'முதல்வர் கோப்பை' கூடைப்பந்து போட்டியில் காஞ்சிபுரம் அணி வீரர், வீராங்கனைகள் கலக்கல்
'முதல்வர் கோப்பை' கூடைப்பந்து போட்டியில் காஞ்சிபுரம் அணி வீரர், வீராங்கனைகள் கலக்கல்
ADDED : அக் 16, 2024 12:04 AM

கோவை : 'முதல்வர் கோப்பை' மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் காஞ்சிபுரம் அணியின் வீரர், வீராங்கனைகள் என இரு பிரிவினரும், நேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கோவை நேரு ஸ்டேடியம் எதிரே மாநகராட்சி மைதானத்தில், முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி கடந்த, 7ம் தேதி துவங்கியது. பள்ளி மாணவர்களை தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் கல்லுாரி மாணவர்களுக்கு, போட்டிகள் நடந்துவருகின்றன.
வரும், 18ம் தேதி போட்டிகள் நிறைவடைகின்றன. இரண்டாம் நாளான நேற்று செங்கல்பட்டு அணி, 93-40 என்ற புள்ளி கணக்கில் பெரம்பலுார் அணியையும், மதுரை அணி, 70-43 என்ற புள்ளி கணக்கில் தஞ்சாவூர் அணியையும், கோவை அணி, 82-36 என்ற புள்ளி கணக்கில் திருவாரூர் அணியையும், காஞ்சிபுரம் அணி, 69-44 என்ற புள்ளி கணக்கில் ஈரோடு அணியையும் வென்றன.
பெண்களுக்கான போட்டியில், செங்கல்பட்டு அணி, 100-44 என்ற புள்ளி கணக்கில் கள்ளக்குறிச்சி அணியையும், திருச்சி அணி, 75-13 என்ற புள்ளி கணக்கில் கிருஷ்ணகிரி அணியையும், திண்டுக்கல் அணி, 85-9 என்ற புள்ளி கணக்கில், ராமநாதபுரம் அணியையும் வென்றன.
தொடர்ந்து, வேலுார் அணி, 113-23 என்ற புள்ளி கணக்கில் விழுப்புரம் அணியையும், காஞ்சிபுரம் அணி, 87-42 என்ற புள்ளி கணக்கில், சேலம் அணியையும் வென்றன.
இதில், காஞ்சிபுரம் வீரர், வீராங்கனைகள் எதிரணியுடன் சுறுசுறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கைதட்டல்களை பெற்றனர். தொடர்ந்து, போட்டிகள் நடந்துவருகின்றன.