/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காந்தையாறு பாலம் பணி மீண்டும் துவங்கியது
/
காந்தையாறு பாலம் பணி மீண்டும் துவங்கியது
ADDED : மார் 17, 2025 12:22 AM

மேட்டுப்பாளையம்; சிறுமுகை காந்தை ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணிகள் மீண்டும் துவங்கியது.
சிறுமுகை பேரூராட்சியில் காந்தையாறு ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்ட, 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
கடந்த, 2023ம் ஆண்டு உயர் மட்ட பாலம் கட்டும் பணிகள் துவங்கின. இரண்டு ஆண்டுகளில் பாலம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை, மழை வந்து ஆற்றில் தண்ணீர் தேங்கியதால், கட்டுமான பணிகள் நடைபெறவில்லை.
ஆறு மாதத்திற்கு பிறகு தற்போது, பாலம் கட்டும் பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளன. பணி துவங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.