தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கரகாட்டம் ஆடி விழிப்புணர்வு

கரகாட்டம் ஆடி விழிப்புணர்வு

கரகாட்டம் ஆடி விழிப்புணர்வு


ADDED : ஆக 29, 2026 03:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 03:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார்: நாட்டுப்புற கிராமிய கலைகளின் மூலம், பால்வினை நோய் தொற்று மற்றும் எச்.ஐ.வி., குறித்து தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்கம், ஆக. 12 முதல் அக். 12ம் தேதி வரை, கோவை மாவட்டத்தில் நடக்கிறது.

அன்னூர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் அல்லிகுளத்தில் கரகாட்டம், வாத்திய இசையுடன் நடந்த இந்த நிகழ்ச்சிகளில் முறையற்ற உறவால் ஏற்படும் உடல் நல பாதிப்பு, பொருளாதார பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாடல்கள் பாடப்பட்டன. கரகத்துடன் கலை குழுவினர் ஆடினர்.

பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், அன்னுார் ரோட்டரி சங்கத் தலைவர் சரவணன், மருத்துவம் சாரா வட்டார மேற்பார்வையாளர் கோவிந்தசாமி, ஆலோசகர் சரவணன், ‘கூடு’ என்.ஜி.ஓ., ஊழியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us