/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய யோகா போட்டியில் காரமடை மாணவி வெற்றி
/
தேசிய யோகா போட்டியில் காரமடை மாணவி வெற்றி
ADDED : அக் 21, 2025 10:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்: காரமடையை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி தேசிய அளவிலான யோகா போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
அண்மையில் கோவாவில், சர்வதேச யூத் யோகா, 2025 யூத் இந்தியன் மற்றும் யோகா கூட்டமைப்புகள் இணைந்து 5வது தேசிய அளவிலான யோகா போட்டிகளை நடத்தியது.
இதில் காரமடை ரங்கநாதர் பப்ளிக் பள்ளியை சேர்ந்த 7ம் வகுப்பு மாணவி ஜெய்வர்சா 13வயதிக்குட்பட்ட பிரிவில் பங்கேற்று முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.
இதையடுத்து பள்ளி அறங்காவலர் கல்யாண சுந்தரம், முதல்வர் நந்தினி ஆகியோரிடம் யோகா மாணவி ஜெய்வர்சா வாழ்த்து பெற்றார்.
அவரை பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.---