/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கற்பக விநாயகர் நகர் பொதுமக்கள் போராட்டம்
/
கற்பக விநாயகர் நகர் பொதுமக்கள் போராட்டம்
ADDED : ஜன 10, 2026 05:20 AM

அன்னூர்: வீடுகளுக்குள் மழை நீர் புகுவதை தடுக்க வடிகால் அமைக்க கோரி, கற்பக விநாயகர் நகர் மக்கள் மூன்று ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
அன்னூர், அவிநாசி சாலையில், நாகமாபுதூரில், ஸ்ரீ கற்பக விநாயகர் நகர் உள்ளது. இங்கு 50 குடும்பங்கள் வசிக்கின்றன. சாலை மட்டத்திலிருந்து இந்த நகர் தாழ்வாக உள்ளதால், ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும், மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.
மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதை தடுக்க சாலையை ஒட்டி கழிவுநீர் வடிகால் அமைத்தால், மழை நீர் அந்த வடிகால் வழியாக குன்னத்தூராம்பாளையம் குளத்திற்கு சென்று விடும்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'அன்னூர் பேரூராட்சி அலுவலகத்திலும், மக்களுடன் முதல்வர் முகாமிலும், கோவை கலெக்டர் அலுவலகத்திலும் இதுகுறித்து மனு அளித்தோம். பேரூராட்சி நிர்வாகம் தான் வடிகால் அ மைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலை துறையினர் கூறிவிட்டனர். இந்தக் கோரிக்கைக்காக மூன்றாண்டுகளாக போராடி வருகிறோம். எனினும் பேரூராட்சி நிர்வாகம் வடிகால் அமைக்காமல் தாமதிக்கிறது' என்றனர்.

