/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாலிபால் போட்டியில் கற்பகம் பல்கலை 'டாப்'
/
வாலிபால் போட்டியில் கற்பகம் பல்கலை 'டாப்'
ADDED : செப் 10, 2025 10:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை வாலிபால் போட்டி, கற்பகம் பல்கலையில் மூன்று நாட்கள் நடந்தது. இதில், 70 கல்லுாரி அணிகள் பங்கேற்றன. 'நாக் அவுட்' முறையில் போட்டிகள் நடந்தன.
அரையிறுதி போட்டியில், பொள்ளாச்சி எஸ்.டி.சி. கல்லுாரி அணியை எதிர்கொண்ட கற்பகம் பல்கலை அணி, 2-1 என்ற செட் கணக்கில் வென்று, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிப்போட்டியில், பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரி அணியுடன், 2-0 என்ற செட் கணக்கில் கற்பகம் பல்கலை அணி வென்று முதலிடத்தை பெற்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.