/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட சிலம்ப விளையாட்டு 19 பதக்கங்கள் அள்ளிய கற்பகம்
/
மாவட்ட சிலம்ப விளையாட்டு 19 பதக்கங்கள் அள்ளிய கற்பகம்
மாவட்ட சிலம்ப விளையாட்டு 19 பதக்கங்கள் அள்ளிய கற்பகம்
மாவட்ட சிலம்ப விளையாட்டு 19 பதக்கங்கள் அள்ளிய கற்பகம்
ADDED : செப் 15, 2025 09:51 PM
கோவை; கோவை மாவட்ட சிலம்ப விளையாட்டு கழகம் மற்றும் கற்பகம் பல்கலை சார்பில், மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி, பல்கலை வளாகத்தில் நடந்தது.
சப் -- ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் கற்பகம், சிலம்பாலயா, இளந்தளிர் போன்ற குழுக்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
கற்பகம் பல்கலை மாணவ, மாணவியர், சீனியர் பிரிவில் 18 தங்கம், ஒரு வெள்ளி என, 19 பதக்கங்கள் வென்றனர். ஆண்களுக்கான கம்பு வீச்சு பிரிவில் கவுதமகிருஷ்ணன், அலங்கார வீச்சு பிரிவில் சசிதரன், வேல் கம்பு வீச்சு பிரிவில் மதன் பாபு, ஒற்றை வால் வீச்சு பிரிவில் கோகுல் ராஜ், ஒற்றை சுருள்வாள் வீச்சு பிரிவில் விஜய சந்தோஷ், இரட்டை வால் வீச்சு பிரிவில் மணிவாசகம் ஆகியோர் பதக்கம் வென்றனர்.
கம்பு சண்டை, 55 கிலோ எடை பிரிவில் சவுண்ட்ராஜ், 60 கிலோ எடை பிரிவில் கிஷோர் கிங், 65 கிலோ எடை பிரிவில் சஞ்சய், 75 கிலோ எடை பிரிவில் லிலாதரன், பெண்களுக்கான வேல் கம்பு வீச்சு பிரிவில் மவுலி ஆகியோர் பதக்கங்கள் பெற்றனர்.
ஒற்றை வால் வீச்சு பிரிவில் மரியரீட்டா, இரட்டை மான் கொம்பு வீச்சு பிரிவில் ராஜம், கம்பு சண்டை போட்டியில், 45 கிலோ எடை பிரிவில் பிரசீலா ஏஞ்சல், 60 கிலோ எடை பிரிவில் அபிநயா ஆகியோர் பதக்கங்கள் வென்றனர். வெற்றி பெற்றவர்களை, பல்கலை நிர்வாகத்தினர் பாராட்டினர்.