/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையோரம் மலர்ந்த கார்த்திகை பூக்கள்
/
சாலையோரம் மலர்ந்த கார்த்திகை பூக்கள்
ADDED : டிச 03, 2024 06:26 AM

வால்பாறை; வால்பாறையில், சாலையோரம் பூத்துக்குலுங்கும் கார்த்திகைப்பூக்களை சுற்றுலா பயணியர் வெகுவாக கண்டு ரசித்தனர்.
வால்பாறையில் பருவமழைக்கு பின் நிலவும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், வனப்பகுதியில் பல்வேறு வகையான பூக்கள் பூத்துகுலுங்குகின்றன. வடகிழக்குப் பருவமழை நீடிக்கும் நிலையில், எஸ்டேட் பகுதியில் அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவும், மாலை நேரத்தில் கடுங்குளிரும் நிலவுகிறது.
வால்பாறையில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் டிசம்பர் மாதத்தில் பூத்துக்குலுங்கும் கார்த்திகை பூக்கள் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியிலும், சாலையோரங்களிலும் பரவலாக பூத்துக்குலுங்குகின்றன. கண்களுக்கு விருந்தளிக்கும் வெள்ளை நிறப்பூக்களை சுற்றுலாப் பயணியர் வெகுவாக கண்டு ரசிக்கின்றனர்.