sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா

/

கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா

கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா

கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா


ADDED : செப் 10, 2025 09:50 PM

Google News

ADDED : செப் 10, 2025 09:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெகமம்; காட்டம்பட்டி அருகே, அரசூர் கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா வரும், 14ம் தேதி நடக்கிறது.

நெகமம், காட்டம்பட்டி அருகில் உள்ள, அரசூர் கருப்பராயன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விழா இன்று, 11ம் தேதி துவங்குகிறது. காலை 8:00 மணிக்கு, ஜக்கார்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் இருந்து யானை மேல் தீர்த்த குடங்கள் எடுத்து வருதல், முளைப்பாரிகள் எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

நாளை, 12ம் தேதி, காலை 8:00 மணிக்கு, மங்கள விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, தீபாராதனை நடக்கிறது.

மதியம் 12:00 மணிக்கு, கோபுர விமானம் நிறுவப்படுகிறது. மாலை 5:00 மணிக்கு, அங்குரார்ப்பணம், ரக்சாபந்தனம், யாகசாலை பிரவேசம், வேதிகா அர்ச்சனை உள்ளிட்டவை நடக்கிறது.

வரும், 13ம் தேதி, மாலை 5:00 மணிக்கு, மகாலட்சுமி பூஜை, கருவறையில் தீபம் ஏற்றுதல், நாடிசந்தானம், தீபாராதனை நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு, அனைத்து மூர்த்திகளுக்கும் எந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது.

14ம் தேதி, காலை 4:00 மணிக்கு, அனைத்து விக்கிரகங்களுக்கும் ரக்சாபந்தனம் நடக்கிறது. காலை 7:35 மணிக்கு, யாத்ராதானம், கடம் புறப்பாடு, அனைத்து விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

காலை 10:00 மணிக்கு, சுவாமிக்கு அபிஷேகம், தசதானம், கோபூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us