ADDED : செப் 13, 2026 07:02 PM

கோவை: முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டாக, பார்வையாளர்கள் மத்தியில் பரவியுள்ளன, இந்த கயாக்கிங் மற்றும் கனாயிங் போட்டிகள்.
ஒரு சின்ன குறுகலான படகில், இருபக்கம் கொண்ட துடுப்பு மூலம் தண்ணீரில் செல்லும் போட்டிகள்தான் இவை. ஒருவர் அல்லது இருவர் அமர்ந்து செல்லும் விதத்தில் உள்ள படகில் கால்களை நீட்டிக்கொண்டு உட்காரும் முறையை ‘கயாக்கிங்’ என்றும், கால்களை மடக்கி அல்லது முட்டி போட்டுக் கொண்டு படகை செலுத்தினால் ‘கனாயிங் என்றும் அழைக்கின்றனர்.
ஏரி, ஆறு மற்றும் கடல் பகுதிகளில் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த முறை மண்டல அளவிலான இப்போட்டி, ஈரோடு மாவட்டம் காவிளிபாளையம் அருகே உள்ள ஏரி பகுதியில் வரும் 27, 28 தேதிகளில் நடக்கவுள்ளது.
ஆன்லைனில் பதிவு செய்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என மண்டல விளையாட்டு அலுவலர் அருணா தெரிவித்துள்ளார்.
