தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கேரளா ஸ்டைல் சிக்கன் ரோஸ்ட்

கேரளா ஸ்டைல் சிக்கன் ரோஸ்ட்

கேரளா ஸ்டைல் சிக்கன் ரோஸ்ட்


UPDATED : நவ 28, 2026 04:21 AM

ADDED : நவ 28, 2026 04:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 04:21 AM ADDED : நவ 28, 2026 04:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:சிக்கன் – 500 கிராம் பெரிய வெங்காயம் – 3 தக்காளி – 1 பச்சை மிளகாய் – 2 இஞ்சி – 1 பெரிய துண்டு பூண்டு – 8 பல்

செய்முறை:

முதலில் சிக்கனை நன்றாகச் சுத்தம் செய்து, தேவையான அளவு துண்டுகளாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள், சிறிதளவு உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகப் பிசைய வேண்டும். ஒரு கடாயில் மிளகு, சோம்பு, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் மிதமான தீயில் வறுக்க வேண்டும். நல்ல மணம் வந்ததும் அடுப்பை அணைத்து ஆறவிடவும். பின்னர் இவற்றை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அகலமான கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். அதில் கறிவேப்பிலையைச் சேர்த்ததும் நல்ல மணம் வரும். நீளமாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்குவது இந்த உணவின் சுவைக்கு முக்கியமானது.

பின்னர் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும். பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாகக் குழைய விடவும். தக்காளி மென்மையாகி எண்ணெய் பிரியத் தொடங்கும்போது சிறிதளவு உப்பு சேர்க்கலாம்.

இப்போது ஊறவைத்த சிக்கனைச் சேர்த்து அதிக தீயில் சில நிமிடங்கள் நன்றாகக் கிளற வேண்டும்.

சிக்கன் முக்கால் பதம் வெந்ததும் அரைத்து வைத்துள்ள வறுத்த மசாலாவைச் சேர்க்க வேண்டும். அதனுடன் கரம் மசாலாவையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சிக்கனில் உள்ள தண்ணீர் வற்றி, மசாலா கெட்டியாகி எண்ணெய் லேசாகப் பிரியத் தொடங்கும் வரை வதக்கவும். சிக்கன் நன்றாக வெந்து, மசாலா கெட்டியாகப் படிந்ததும் அடுப்பை அணைக்கலாம்.இறுதியாக சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய கொத்தமல்லித்தழையைச் சேர்த்து கிளறவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us