/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆர்வம் காட்டாத கேரளா வியாபாரிகள் உறைபனியால் கேரட் பீன்ஸ் வரத்து சரிவு

ADDED : டிச 27, 2025 05:21 AM
மேட்டுப்பாளையம்: -: மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் மொத்த காய்கறி மார்க்கெட் உள்ளது.
இங்கு, நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரட், பீன்ஸ் விற்பனைக்கு வருகிறது.
தினமும் சுமார் 3 ஆயிரம் மூட்டை கேரட்டுகள், 2 ஆயிரம் மூட்டை பீன்ஸ் வருவது வழக்கம். நீலகிரி மாவட்டத்தில் தொடரும் உறைபனியால் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது.
வியாபாரி ராஜா கூறியதாவது:-
நேற்று கேரட் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை ஆனது. பீன்ஸ் ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.45 வரை விற்பனை ஆனது. பீட்ரூட் ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை ஆனது.
நீலகிரி மாவட்டத்தில் தொடரும் உறைபனியால் காய்கறிகள் வரத்து சுமார் 10 முதல் 15 சதவீதம் வரை குறைந்துள்ளது. வரத்து குறைந்தபோதிலும் விலை ஏறவில்லை. டிமாண்ட் இல்லை என்பதால் விலையில் பெரிய மாறுபாடு இல்லை.
கேரளாவுக்கு சுமார் 50 சதவீதம் காய்கறிகள் இங்கிருந்து தான் செல்கிறது. அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், கேரளா மக்கள் பலரும் சுற்றுலா செல்வதால், காய்கறிகள் விற்பனை மந்தமாக நடக்கும். இதனால் கேரளா வியாபாரிகள் காய்கறிகள் வாங்க அதிகம் ஆர்வம் காட்டவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.---