/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேசவ் வித்யா மந்திர் மாணவர்கள் அசத்தல்
/
கேசவ் வித்யா மந்திர் மாணவர்கள் அசத்தல்
ADDED : மே 18, 2025 10:11 PM
பொள்ளாச்சி ; பொள்ளாச்சி, பாலக்காடு ரோட்டில் உள்ள கேசவ் வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் அசத்தியுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவி பாவனா, 587 மதிப்பெண் பெற்று முதலிடமும்; மாணவன் அபினேஷ், 579 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும்; மாணவி ரூபாஸ்ரீ, 565 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனர்.
பத்தாம் வகுப்பு தேர்வில், மாணவி சாந்திலினி, 485 மதிப்பெண் பெற்று முதலிடமும், மாணவன் ரிஸ்வந்த் வெங்கட், 477 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும்; விகாஸ், 474 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பெற்றனர்.
தேர்வில் வென்ற மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் மாரிமுத்து, செயலாளர் ரவிச்சந்திரன், முதல்வர் பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் வாழ்த்து தெரிவித்தனர்.