/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.ஜி. பள்ளி சார்பில் என்.எஸ்.எஸ். முகாம்
/
கே.ஜி. பள்ளி சார்பில் என்.எஸ்.எஸ். முகாம்
ADDED : செப் 30, 2025 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; அரசு உதவி பெறும் அன்னுார் கே.ஜி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட முகாம் (என்.எஸ்.எஸ்.), சொக்கம்பாளையத்தில் நடைபெற்று வருகிறது. திட்ட அலுவலர் கவிதா வரவேற்றார். தேசிய சேவா சங்கத் தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார்.
சிற்பி அமைப்பின் தலைவர் ரங்கநாதன், தேசிய வித்யா சாலை தாளாளர் திருவேங்கிடம், கவுன்சிலர் செல்வி பன்னீர்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர். என்.எஸ்.எஸ். மாணவியர் மரக்கன்று நட்டனர். அன்னுார் குளக்கரையில் பனை விதைகள் நடப்பட்டன. போதை விழிப்புணர்வு மற்றும் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. அக். 2ல் முகாம் நிறைவு பெறுகிறது.