/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொம்பன் யானை 'வாக்கிங்' ; அச்சத்தில் தொழிலாளர்கள்
/
கொம்பன் யானை 'வாக்கிங்' ; அச்சத்தில் தொழிலாளர்கள்
ADDED : அக் 18, 2024 10:21 PM

வால்பாறை : வால்பாறை அருகே காலை நேரத்தில் வாங்கிங் சென்ற யானையால், தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், தனித்தனி கூட்டமாக யானைகள் முகாமிட்டுள்ளன. பகல் நேரத்தில் தேயிலை காட்டிலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலும் உலா வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை வால்பாறையில் இருந்து கருமலை இறைச்சல் பாறை நீர்வீழ்ச்சி செல்லும் ரோட்டில், 'கொம்பன்' என்றழைக்கப்படும் யானை ஒய்யாரமாக செல்வதை அந்த வழியாக சென்ற மக்கள் கண்டனர்.
காலை நேரம் என்பதால், அந்த வழியாக தேயிலை பறிக்க சென்ற தொழிலாளர்கள் யானையை கண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். 10 நிமிடத்துக்கு பின், யானை தானாக வனப்பகுதிக்குள் சென்றதையடுத்து, தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.

