/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.பி.ஆர்., கல்லுாரி பட்டமளிப்பு விழா
/
கே.பி.ஆர்., கல்லுாரி பட்டமளிப்பு விழா
ADDED : பிப் 15, 2025 11:05 PM

கோவை: அரசூர், கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரியில், 2019-20ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு, முதல் பட்டமளிப்பு விழா நடந்தது.
பெர்காடியா நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் மற்றும் மனித வள மேம்பாட்டாளர் டெபாசியஷ் கோஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கல்லுாரி முதல்வர் கீதா, விழா அறிக்கையை வாசித்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு பட்டமும், விருதுகளும் வழங்கப்பட்டன.
பட்டமளிப்பு விழாவில் பட்டங்கள் பெற்ற, 108 மாணவர்கள், உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.
விழாவில் கே.பி.ஆர்., கல்வி நிறுவனங்களின் செயலர் காயத்ரி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.