ADDED : செப் 02, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் வருகிற ஆறாம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழாவும், ஊர்வலமும் நடைபெற உள்ளது.
மேட்டுப்பாளையம் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், கிருஷ்ண ஜெயந்தி விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு வருகிற ஆறாம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை கிருஷ்ணர், ராதை வேடமிட்டு ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டுமென, பொதுமக்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் கணேசன், கோவை கோட்ட செயலாளர் மகேஷ் குமார், மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
