/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மார்கழி மாத கிருத்திகை விழா; முருகன் கோவில்களில் வழிபாடு
/
மார்கழி மாத கிருத்திகை விழா; முருகன் கோவில்களில் வழிபாடு
மார்கழி மாத கிருத்திகை விழா; முருகன் கோவில்களில் வழிபாடு
மார்கழி மாத கிருத்திகை விழா; முருகன் கோவில்களில் வழிபாடு
ADDED : ஜன 10, 2025 12:14 AM
அன்னுார்; கிருத்திகையை முன்னிட்டு, பழனி ஆண்டவர் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.
மார்கழி மாத கிருத்திகையை முன்னிட்டு அன்னூர் அருகே சாலையூரில் உள்ள பழனியாண்டவர் கோவிலில் நேற்று மாலை பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் முருகப்பெருமானுக்கு அபிஷேக பூஜை நடந்தது. இதையடுத்து, அலங்கார பூஜை, கோவில் உட்பிரகாரத்தில் உற்சவர் உலா நடந்தது.
அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் முருகன் சன்னதியில் நேற்று மதியம் அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
குமரன் குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில், எல்லப்பாளையம் பழனியாண்டவர் , குன்னத்தூர் பழனியாண்டவர், குமாரபாளையம் வட்டமலை ஆண்டவர் கோவில்களில் கிருத்திகையை முன்னிட்டு, நேற்று அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது.
திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.