/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வால்பாறையில் குளுகுளு சீசன்; சுற்றுலா பயணியர் அதிகரிப்பு
/
வால்பாறையில் குளுகுளு சீசன்; சுற்றுலா பயணியர் அதிகரிப்பு
வால்பாறையில் குளுகுளு சீசன்; சுற்றுலா பயணியர் அதிகரிப்பு
வால்பாறையில் குளுகுளு சீசன்; சுற்றுலா பயணியர் அதிகரிப்பு
ADDED : மார் 30, 2025 10:40 PM

வால்பாறை; தொடர்விடுமுறையால், வால்பாறையில் சுற்றுலாபயணியர் அதிக அளவில் திரண்டுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள பாலாஜி கோவில், சோலையாறு அணை உட்பட பல்வேறு இடங்களை கண்டு ரசிக்க, பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர்.
தற்போது,ரம்ஜான் பண்டிகை விடுமுறையில், வால்பாறையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணியர் திரண்டுள்ளனர்.
சுற்றுலாபயணியர் வருகையால், சக்தி - தலனார் செல்லும் ரோட்டில் உள்ள வியூ பாயிண்ட், சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சி முனை, சோலையாறு அணை, அட்டகட்டி ஆர்கிட்டோரியம் உள்ளிட்ட சுற்றுலா ஸ்தலங்களில், சுற்றுலாபயணியர் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
அவர்கள், ஆழியாறு வழியாக வால்பாறை வரும் மலைப்பாதையில், வரையாடு, சிங்கவால்குரங்குகள், யானைகள், காட்டுமாடு, உள்ளிட்ட வனவிலங்குகளை நேரில் கண்டு ரசிக்கின்றனர்.
மேலும் வால்பாறை நகரில் உள்ள தாவரவியல் பூங்காவை கண்டு ரசிப்பதோடு, படகு சவாரியிலும் பயணம் செய்து மகிழ்ச்சியடைந்தனர்.
சமவெளிப்பகுதியில் தற்போது வெயில் கொளுத்தும் நிலையில், வால்பாறை மலைப்பகுதியில் லேசான குளிருடன், ரம்யமான சிதோஷ்ணநிலை நிலவுவதால், அங்கு சுற்றுலாபயணியர் அதிக அளவில் வந்துள்ளனர்.
அவர்கள் வருகையால் வால்பாறையில் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பியுள்ளன.மேலும் அதிக அளவில் சுற்றுலா பயணியர் வருகையொட்டி, போலீசாரும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.