/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொம்ம காளியம்மன்கோவில் கும்பாபிஷேகம்
/
பொம்ம காளியம்மன்கோவில் கும்பாபிஷேகம்
ADDED : டிச 12, 2024 11:28 PM

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே உள்ள, செல்வவிநாயகர் மற்றும் பொம்ம காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
காரமடை அடுத்த தேக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, கிட்டம்பாளையத்தில் செல்வ விநாயகர் மற்றும் பொம்ம காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், கும்பாபிஷேகப் பணிகள் கடந்த, 10ம் தேதி மங்கள இசை, கோ பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது.
நேற்று காலை, 5:00 மணிக்கு நான்காம் கால யாக வேள்வி பூஜையில், மூல மந்திரம் தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. காலை, 8:00 மணிக்கு யாகசாலையிலிருந்து, தீர்த்தக் குடங்கள் ஊர்வலமாக கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டது.
பின்பு கோபுர கலசத்தின் மீதும், மூலவர் செல்வ விநாயகர், பொம்ம காளியம்மன் ஆகிய சுவாமிகள் மீதும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
பின்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை கவுமார மடாலய ராமானந்த குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். ஜெய பாலசுப்பிரமணிய குருக்கள், விவேக் சிவம் அர்ச்சகர் ஆகியோர் அடங்கிய குழுவினர், யாக வேள்வி பூஜைகளை செய்தனர்.
விழாவில் கிட்டம்பாளையம் ஊர் கவுடர் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.