/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விநாயகர் கோவிலில் கும்பாபிேஷகம்
/
விநாயகர் கோவிலில் கும்பாபிேஷகம்
ADDED : ஏப் 21, 2025 05:00 AM

வால்பாறை : விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழாவில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வால்பாறை அடுத்துள்ளது ஐயர்பாடி எஸ்டேட் முதல்பிரிவு (ரோப்வே). இங்குள்ள சக்திவிநாயகர் கோவிலின் மஹா கும்பாபிேஷக விழாவையொட்டி, நேற்று முன் தினம் மாலை, 5:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கிராம சாந்தி, நடந்தது.
இரவு, 7:00 மணிக்கு முதல் கால யாக வேள்வி, கணபதி ேஹாமம், ஸ்ரீருத்ேஹாமம், நடைபெற்றது. இரவு, 8:00 மணிக்கு ஸ்வர்ணயந்திர, ரத்தின ஸ்தாபம், சுவாமி பிரதிஷ்டை நடைபெற்றது.
விழாவில் நேற்று காலை, 6:00 மணிக்கு இரண்டாம்கால யாக வேள்வி, மூலமந்திர ேஹாமம், தீபாராதனையும் நடந்தது.காலை, 10:00 மணிக்கு பல்வேறு கோவில்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனிதத்தீர்த்தத்தை பக்தர்கள் எடுத்து, கோவிலை வலம் வந்தனர்.
பின்விமான கலசத்திற்கு கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிேஷக விழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.