/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உச்சி மாகாளியம்மன் கோவிலில் வரும் 10ல் கும்பாபிேஷகம்
/
உச்சி மாகாளியம்மன் கோவிலில் வரும் 10ல் கும்பாபிேஷகம்
உச்சி மாகாளியம்மன் கோவிலில் வரும் 10ல் கும்பாபிேஷகம்
உச்சி மாகாளியம்மன் கோவிலில் வரும் 10ல் கும்பாபிேஷகம்
ADDED : நவ 07, 2025 09:40 PM
பொள்ளாச்சி: புளியம்பட்டி உச்சிமாகாளியம்மன் கோவிலில் மஹா கும்பாபிேஷக விழா வரும், 10ம் தேதி நடக்கிறது.
பொள்ளாச்சி அருகே, புளியம்பட்டி உச்சி மாகாளியம்மன் கோவிலில் மஹா கும்பாபிேஷக விழா நாளை (9ம் தேதி) காலை, 6:00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, கணபதி ேஹாமத்துடன் துவங்குகிறது.
காலை, 10:00 மணிக்கு தீர்த்த குடம் எடுத்து வருதல், புற்றுமண், சகல மேலதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைகிறது. மாலை, 4:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசம், முதல் கால யாக வேள்வி, இரவு, 8:00 மணிக்கு அஷ்டபந்தன மருந்துசாற்றுதல் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது.
வரும், 10ம் தேதி காலை, 4:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாக வேள்விகள், மூல மந்திர ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு ேஹாம பூஜைகள் நடக்கிறது.காலை, 6:10 மணிக்கு விமான கோபுர மஹா கும்பாபிேஷகம், மூலமூர்த்தியான உச்சி மாகாளியம்மனுக்கு மஹா கும்பாபிேஷகம் நடக்கிறது.
தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அதன்பின், மஹா அபிேஷகம், தசதரிசனம், தசதானம், சர்வ அலங்கார மகா தீபாராதனை பூஜைகள் நடக்கிறது.

