/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழா
/
ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழா
ADDED : பிப் 22, 2024 05:19 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, சாலைப்புதுாரில் உள்ள ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
பொள்ளாச்சி, சாலைப்புதுாரில் உள்ள ஐயப்பன் கோவில், கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி, 19ம் தேதி மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், தீர்த்தம் மற்றும் முளைப்பாலிகை அழைத்து வரும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
கடந்த, 20ம் தேதி, வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜை, பூர்ணாஹுதி, பிரசாதம் வழங்குதல், எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.
நேற்று, 21ம் தேதி, காலை இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், திரவ்யாஹுதி, கலசம் புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து விமான கும்பாபிஷேகம் மற்றும் விநாயகர், முருகர், ஐயப்ப சுவாமி மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது.