/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : பிப் 04, 2025 12:12 AM

சூலுார்; சூலுார் மேற்கு மாகாளியம்மன் கோவிலில் கருவறை மற்றும் அர்த்த மண்டபம் கருங்கற்களினால் அமைக்கப்பட்டு திருப்பணிகள் நடந்தன.
கும்பாபிஷேக விழா, கடந்த, 30ம் தேதி திருவிளக்கு வழிபாடு, விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. கணபதி ஹோமம், காப்பு கட்டுதல், மாலை முளைப்பாலிகை மற்றும் தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. விமான கலசம் வைத்தல், அஷ்ட பந்தன மருந்து சாத்தப்பட்டது.
நேற்று முன்தினம் காலை, நான்காம் கால ஹோமம், பூர்ணாகுதி முடிந்து புனிதநீர் கலசங்கள், மேள, தாளத்துடன் கோவிலை வலம் வந்தன. 10:00 மணிக்கு, மாகாளியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.