/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செல்வ விநாயகர் கோவில் 15ல் கும்பாபிஷேக விழா
/
செல்வ விநாயகர் கோவில் 15ல் கும்பாபிஷேக விழா
ADDED : டிச 09, 2024 05:21 AM
அன்னுார் : பொன்னேகவுண்டன்புதூர், செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 15ம் தேதி நடக்கிறது.
பொன்னேகவுண்டன்புதூரில், பச்சாபாளையம் சாலையில் செல்வ விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு கோபுரம், விமானம், கருவறை ஆகியவை அமைக்கப்பட்டு, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்க்கை அம்மன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் சன்னதிகள் அமைக்கப்பட்டு, சிற்பங்கள் நிறுவப்பட்டுள்ளன.
திருப்பணிகள் முடிந்ததை அடுத்து, கும்பாபிஷேக விழா, வரும் 14-ம் தேதி மாலை பிள்ளையார் வழிபாடுடன் துவங்குகிறது. இரவு திருவிளக்கு வழிபாடு, கோபுர விமான கலசங்கள் நிறுவுதல், 108 வகையான மூலிகைப் பொருட்களை சமர்ப்பித்தல், எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது.
வரும் 15-ம் தேதி அதிகாலையில் இரண்டாம் கால வேள்வி பூஜையும், காலை 9.10 மணிக்கு, கோபுரங்கள், விமான கலசங்கள் மற்றும் மூலமூர்த்திகளுக்கு, புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. இதையடுத்து, மகாபிஷேகம், அலங்கார பூஜை, பேரொளி வழிபாடு நடக்கிறது.