ADDED : செப் 10, 2025 10:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே காளிபாளையத்தில் உள்ள திருமலைராய பெருமாள் திருக்கோவிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.
விழாவையொட்டி காலை, 6:00 மணிக்கு யாகசாலை வேள்வி நடந்தது. நிகழ்ச்சிக்கு கவுண்டம்பாளையம் ஸ்ரீ வாராகி மந்திராலயம் பீடாதிபதி வாராகி மணிகண்ட சுவாமிகள் தலைமை வகித்தார். இரவு, 7:30 மணிக்கு பூதேவி, ஸ்ரீதேவி சமேத திருமலைராய பெருமாள் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இரவு, 8:00 மணிக்கு அன்னதானம் நடந்தது.