/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காமாட்சி அம்மன், கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
/
காமாட்சி அம்மன், கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
காமாட்சி அம்மன், கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
காமாட்சி அம்மன், கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : செப் 14, 2025 11:17 PM

மேட்டுப்பாளையம்; காரமடையில் உள்ள காமாட்சியம்மன் மற்றும் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
காரமடையில் சந்தை அருகே காமாட்சி அம்மன் கோவிலும், நஞ்சுண்டேஸ்வரர் கோவில் அருகே கற்பக விநாயகர் கோவிலும் உள்ளது.
இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. கடந்த, 12ம் தேதி காலை விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேகம் விழா துவங்கியது.
மாலையில் முதல் கால யாக பூஜையும், காப்பு கட்டுதலும் நடந்தது. 13ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும், தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்தும் சாத்தப்பட்டது. மாலையில் மூன்றாம் காலயாக பூஜையும், 1008 அர்ச்சனைகளும், 108 வகை திரவிய ஹோமமும் நடந்தது.
நேற்று அதிகாலை நான்காம் கால யாக பூஜையும், மூலவர் திருமேனிக்கு அருள் சக்தியை ஏற்றப்பட்டது. 5:15 மணிக்கு யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பட்டு, கோபுர கலசத்திற்கும், பின்பு கற்பக விநாயகருக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து காமாட்சி அம்மன் கோவில் கோபுர கலசத்திற்கும், காமாட்சி அம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காமாட்சி அம்மன் கற்பக விநாயகர் கோவில் அறக்கட்டளை தலைவர் மணி, கோவில் நிர்வாகி செங்கோட்டுவேல், அறநிலைத்துறை இணை கமிஷனர் ரமேஷ், மேட்டுப்பாளையம் கோவில்களில் ஆய்வாளர் ஹேமலதா உட்பட பலர் பங்கேற்றனர்.