/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சித்தி விநாயகர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
/
சித்தி விநாயகர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED : நவ 23, 2025 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூரில் உள்ள சித்தி விநாயகர் கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இக்கோயிலில், கும்பாபிஷேக விழா நேற்று துவங்கியது. நேற்று காலை, மூத்த பிள்ளையார் வழிபாடு, புற்று மண் எடுத்தல், முளைப்பாலிகை வழிபாடு, காப்பு கட்டுதல், தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாலிகை எடுத்து வருதல், முதல் கால வேள்வி நடந்தது. இன்று, காலை, 7:00 மணிக்கு, இரண்டாம் கால வேள்வி நடக்கிறது. தொடர்ந்து, காலை, 8:30 மணி முதல் 9:30 மணிக்குள், மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.

