/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
/
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
ADDED : ஜன 22, 2025 12:37 AM

தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
கோவையின் அடையாளங்களில் ஒன்றாகவும், ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவிலாகவும், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், வரும் பிப்., 10ம் தேதி, கும்பாபிஷேக விழா பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது.
இதற்காக, 2023ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டது. கோவில் கோபுரங்கள், உள் பிரகாரம், வெளிப்பிரகாரங்களில் வர்ணம் பூசும் பணி நிறைவடைய உள்ளது.
கோவிலின் முன், கும்பாபிஷேகத்திற்காக, 60 குண்டங்கள், 49 வேதிகையுடன் கூடிய யாகசாலை மண்டபங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோவில் உள்ள கல் தளங்கள் வழுவழுப்பாக உள்ளதால், அதனை கொத்தும் பணியும் நடந்து வருகிறது. தெப்பக்குளத்தில் புதர்களை அகற்றி, புனரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கும்பாபிஷேகத்துக்கு குறைந்த நாட்களே உள்ளதால், பணிகளை விரைந்து முடிக்க, இரவு, பகலாக பணிகள் மேற்கொள்ளப்படும். யாகசாலை மண்டபம் பணிகள், ஜன., 30ம் தேதி நிறைவடையும் என, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.